×

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

திருச்சி, ஜூலை 20: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா நேற்று இரவு 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர தெப்பத்திருவிழா வரும் 30ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. அதனை வந்தார். 2ம் நாளான இன்று (20-ந்தேதி) அம்மன் கிளிவாகனத்திலும், 3ம்நாள் காமதேனு, 4ம்நாள் சந்திரபிரபை, 5ம் நாள் வெள்ளி ரிஷபவாகனத்திலும், 6ம்நாள்ரிஷபாரூட காட்சியிலும் , 7ம்நாள் பல்லக்கிலும், 8ம்நாள் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தில் வீதிஉலா வருகிறார்.

விழாவின் 9ம் நாளான 27ம் தேதி காலை கோரதத்திலும், மாலை வெள்ளி மஞ்சத்திலும், 10ம் நாள் பல்லக்கிலும் வீதியுலா வருகிறார். தொடர்ந்து அன்று அம்மன் சன்னதியில் ஏற்றி, இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11ம் நாள் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளுகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தெப்ப உற்சவம் 12ம் நாளான 30ம் தேதி மாலை 6.40மணிக்கு மேல் இரவு 7.40 மணிக்குள் கோயில் வளாகத்தில் உள்ள ஆடித்தெப்பகுளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் ஏகசிம்மாசனத்திலும், பஞ்சமூர்த்திகளுடன் தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Adipur ,Thiruvanaikkaval Akilandeswari temple ,Trichy ,Adipur Theppa festival ,Thiruvanaikkaval Jambukeswarar ,Akilandeswari temple ,Adipur festival ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்