- ஸ்டாலின்
- வருசநாடு, போடி
- பிறகு நான்
- வருணநாடு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- சிங்கராஜபுரம்
- வருசநாடு வேணி அம்மன்
- ஆண்டிப்பட்டி
- சட்டமன்ற உறுப்பினர்
- Maharajan
தேனி: வருசநாடு கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சிங்கராஜபுரம் மற்றும் வருசநாடு ஊராட்சி சேர்ந்த பொதுமக்களுக்கு வருஷநாடு வேணி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் முகாமின் நோக்கங்கள் பற்றி பேசினார். பின்னர் மனுக்களை பொதுமக்களிடம் வாங்கினார்.
மேலும் திமுக ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி தங்கப்பாண்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமிழரசன், ஊராட்சி கழக செயலாளர் ஜெயச்சந்திரன், ஆனந்தன், மக்கள் நல பணியாளர் தமிழன், திமுக துணைச் செயலாளர் சேர்மலை ஒன்றிய இளைஞரணி பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் ஆயுத வள்ளி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வருசநாடு ஊராட்சி செயலர் முருகேசன், சிங்கராஜபுரம் ஊராட்சி செயலர் கண்ணதாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
* சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 7வது வார்டு சமுதாயக் கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பேரூர் மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் முன்னிலை வகித்தார். தாசில்தார் கண்ணன் முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் 13 துறை அதிகாரிகளுடன் 43 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்த 345 மனுக்கள் பெறப்பட்டது. ஆர்டிஓ மகாலட்சுமி ஆய்வு செய்தார்.
போடி பிஎச் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நகராட்சி கமிஷனர் பார்கவி தலைமையில் நடைபெற்றது. போடி தாசில்தார் சந்திரசேகர்,ஜோனல் தாசில்தார் அர்ஜூன், நகராட்சி மேலாளர் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் துவக்கி வைத்தார். இம்முகாமில் பொதுமக்களிடம் 415 மனுக்கள் பெறப்பட்டது. போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன், நகராட்சி பொறியாளர் குணசேகரன், சுகாதார அலுவலர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சிதுறை, தமிழ்நாடு மின்சாரவாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் அதிகாரிகள் பொதுமக்களிடையே பட்டா, கட்டிட அனுமதி, வீட்டு வரி ரசீது, பிறப்பு இறப்பு சான்று, விதவை, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்று இணையதளத்தில் பதிவு செய்து பயனாளிகளுக்கு ஒப்புகை சீட்டுகள் வழங்கப்பட்டன.
The post வருசநாடு, போடியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.
