×

பாடியூர், மினுக்கம்பட்டியில் நாளை ‘பவர் கட்’

வடமதுரை/ வேடசந்தூர், ஜூலை 20: வடமதுரை உபகோட்டத்தில் உள்ள தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 21ம் தேதி, திங்கள் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, பெரியகோட்டை ஆகிய ஊர்கள் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராமங்கள், தொழிற்சாலை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இத்தகவலை வடமதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

*இதேபோல் மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், ஆசாரிப்புதூர், எஸ் சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின்தடை ஏற்படும் என வேடசந்தூர் உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post பாடியூர், மினுக்கம்பட்டியில் நாளை ‘பவர் கட்’ appeared first on Dinakaran.

Tags : Badiur ,VADAMADURAI ,VEDASANTUR ,VADAMADURAI UBAGOTT ,Dinakaran ,
× RELATED தஞ்சை மாவட்டத்தில் 19,222 மாணவர்களுக்கு...