×

சீனாவில் இந்திய சிறுவன் சித்ரவதை; நல்ல நாளுக்காக மோடி அரசு காத்திருப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, `நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் மிகவும் முக்கியமான அடிப்படை யுக்தி பாகிஸ்தான், சீனாவை பிரித்தாளுவது. ஆனால், ஒன்றிய அரசு அந்நாடுகளை ஒன்று இணைய செய்திருப்பதன் மூலம் மிகப் பெரிய தவறு இழைத்துள்ளது,’ என்று கூறினார்.இதனிடையே, அருணாச்சலை சேர்ந்த பாஜ எம்பி தபீர் காவோ, `சீனாவால் கடத்தப்பட்ட சிறுவன் மிரம் தரோன் அங்கு சீன ராணுவத்தினரால் அடித்து துன்புறுத்தப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டுள்ளான். ஒன்றிய அரசு இந்த பிரச்சனை குறித்து சீன அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார்.இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதவில், `சீனா முதலில் இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமித்தது. இப்போது குடிமக்களை கடத்தி கொண்டு போய் சித்திரவதை செய்து அனுப்புகிறது. ஆனால், மோடி அமைதியாக `நல்ல நாளுக்காக’ (அச்சே தின்) காத்து கொண்டிருக்கிறார். அருணாச்சல் இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது வெட்க கேடானது ’ என்று கூறியுள்ளார்….

The post சீனாவில் இந்திய சிறுவன் சித்ரவதை; நல்ல நாளுக்காக மோடி அரசு காத்திருப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Chitravatha ,Modi Govt ,Rahul Gandhi ,New Delhi ,President ,Budget Sessions ,Parliament ,Congress ,China ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...