×

இன்று முதல் ஆக.3ம் தேதி வரை நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நல்லாசிரியர் விருதுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களை தேர்வு செய்ய 38 வருவாய் மாவட்டத்திற்கான விருதுகள் நிர்ணயம், மாவட்ட, மாநில குழு அமைத்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் தங்களின் விவரங்களை EMIS இணையதளம் மூலம் இன்று முதல் ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யும் நிகழ்வில் இணைப்பில் கண்ட சான்றினை பதிவேற்றம் செய்யும்படி அனைத்து பள்ளித் தலைமையாசிரிகளுக்கும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கால அவகாசம் நீட்டிப்பு: சிறந்த ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்படும் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க, மாவட்ட தேர்வுக் குழுவுக்கான அவகாசம் வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post இன்று முதல் ஆக.3ம் தேதி வரை நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Department ,Teachers' Day ,Dr. ,Radhakrishnan ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!