×

புத்தாக்க பயிற்சி முகாம்

 

ஒட்டன்சத்திரம், ஜூலை 19: ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி வளாகத்தில் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆலோசனையின் பேரில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட தொடக்க அலுவலர சண்முகநாதன் முன்னிலை வகித்தார்.

மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் தலைமை வகித்து பயிற்சி வழங்கினார். ஆசிரிய பயிற்சி பள்ளி முதல்வர் சங்கர் சிறப்புரையாற்றினார். இம்முகாமில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பதிவேடுகள் வழங்கப்பட்டன. திட்ட அலுவலர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.

The post புத்தாக்க பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Ottanchathram ,National ,Scheme ,District School Education Department ,Ottanchathram Teacher Training Complex ,District ,Principal Education Officer ,Usha ,Innovation ,Training Camp ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா