திண்டுக்கல், ஜூலை 19: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் ஏழு அணிகளும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. நேற்று மாலை பெண்களுக்கான இறுதி போட்டியில் நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் அங்குலாஸ் மேல்நிலைப்பள்ளி அணி, சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி அணியை 7:0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதேபோல் ஆண்கள் இறுதி போட்டியில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணி, எம்எஸ்பி மேல்நிலைப் பள்ளி அணியை 2: 0 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.
தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டீபன், தாளாளர் மரியநாதன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தர்ராஜன் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கினார்.
The post திண்டுக்கல்லில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.
