- ஆதிபூரம் கொடி
- திருவரங்குளம் சிவன் கோயில்
- புதுக்கோட்டை
- பெரியநாயகி அம்பாள் ஆடிப்பூரம் திருவிழா
- சோழ
- சுயம்சேவக் சிவன் கோயில்
- திருவரங்குளம், புதுக்கோட்டை மாவட்டம்
- விழா
புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழம பெருமை வாய்ந்த சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோயிலில் பெரியநாயகி அம்பாள் ஆடிப்பூரம் திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. முன்னதாக கோவில் வாசலில் பந்தல் அமைத்து, வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி, பெரியநாயகி அம்மன் சன்னதியில் உள்ள 31 அடி உயரம் உள்ள கொடிமரத்தில் நாளை காலை 8 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் ஐதீக முறைப்படி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பட்டாடை உடுத்தி மலர் அலங்காரம் செய்து மஹா தீபம் காட்டி கொடியேற்ற உள்ளனர்.
தொடர்ந்து, பத்து நாள் திருவிழா நடைபெற உள்ளது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் பெரியநாயகி அம்பாள் தேர் பவனி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், மண்டகப்படி தாரர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
The post திருவரங்குளம் சிவன் கோயிலில் நாளை ஆடிப்பூரம் கொடியேற்றம் appeared first on Dinakaran.
