×

தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் துரோகிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம்: தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்

சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: ‘மெட்ராஸ் மாகாணம்’ என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு ‘தமிழ்நாடு’ என்று பெயர்ச்சூட்டிய வரலாற்று சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை – 1967ல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த கழக அரசு நிறைவேற்றிய திருநாள்.

‘தமிழ்நாடு’ என்று அண்ணா மும்முறை முழங்க, ‘வாழ்க’ என்ற உறுப்பினர்களின் வாழ்த்து ஒலியால் சட்டமன்றமே உணர்ச்சி பெருக்கால் தத்தளித்தது. ‘‘தமிழ்த் தாயின் நெஞ்சங் குளிர்ந்திடத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றி விட்டோம் என்கிற பூரிப்பு எல்லா உறுப்பினர்களின் உள்ளத்திலும்” என்று எழுதினார் கலைஞர். தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்க கூட்டத்தின் சதியை, அண்ணா – கலைஞர் வழிநின்று முறியடித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நம் தலைவர்கள் போராடி மீட்டுத் தந்த தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லிக்கு காவு கொடுக்க கிளம்பியிருக்கும் பாசிசத்தின் பல்லாக்கு தூக்கிகளை வீழ்த்துவோம். தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஓரணியில் நின்று விரட்டியடிக்க தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம். தமிழ் வெல்க! தமிழ்நாடு வாழ்க!! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டின் மண், மொழி, மானத்தை குலைக்க நினைக்கும் துரோகிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம்: தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Tamil Nadu Day ,Chennai ,DMK government ,Perarignar Anna ,Madras Province ,
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்