×

தேனியில் 6 நகராட்சி தலைவர் பதவியும் பெண்களுக்கே ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு

மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த ராமசுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், சின்னமனூர், தேனி – அல்லிநகரம், பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன. இந்த 6 நகராட்சிகளின் தலைவர் பதவிகளும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விதிப்படி, 50 சதவீதம் என்ற அடிப்படையில் 3 நகராட்சி தலைவர் பதவிகள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். இதை மீறி 6 நகராட்சி தலைவர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கியது ஏற்புடையதல்ல. இதனால், ஆண்களுக்கான வாய்ப்பு முழுமையாக பறிபோயுள்ளது. எனவே, 6 நகராட்சி தலைவர் பதவிகளையும் பெண்களுக்கு ஒதுக்கிய அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்து, 50 சதவீத தலைவர் பதவியை ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் ஆகியோர், இதைப்போல ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவுடன் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்….

The post தேனியில் 6 நகராட்சி தலைவர் பதவியும் பெண்களுக்கே ஒதுக்கியதை எதிர்த்து வழக்கு appeared first on Dinakaran.

Tags : Theni ,Madurai ,Ramasubramanian ,Periyakulam, Theni district ,Kambam, Theni ,Dinakaran ,
× RELATED தேனியில் இலவச மருத்துவ முகாம்