×

சலார் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு பரிசளித்த பிரபாஸ்

ஐதராபாத்: ‘சலார்’ படத்தை சேர்ந்த டெக்னீஷியன்கள் அனைவருக்கும் தலா ரூ.10,000 அன்பளிப்பாக கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். ‘ஆதிபுருஷ்’ படத்துக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் ‘சலார்’. இந்தப் படத்தை ‘கேஜிஎஃப்’ டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். படத்தில் ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைக்கிறார். ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரபாஸ் இந்தப் படத்துக்காக இரவு பகல் பாராமல் உழைத்த படக்குழுவினருக்கு தலா 10,000 ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து ரசிகர்கள் பிரபாஸின் இந்தச் செயலை பாராட்டி வருகின்றனர்.

The post சலார் படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்களுக்கு பரிசளித்த பிரபாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Prabhas ,Salaar ,Hyderabad ,Prabhas' ,KGF ,Prashant Neel ,Shruti Haasan ,Prithviraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மக்களவை தேர்தலால் பிரபாஸ் படத்துக்கு சிக்கல்