×

புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 224 ஆசிரியர்கள் கைது

புதுக்கோட்டை, ஜூலை 17: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களின் பதவிஉயர்வை பறிக்கும் வகையில் உள்ள அரசாணையை (243) ரத்து செய்ய வேண்டும். உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். ஆசிரியர் பதவிஉயர்வுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை என தமிழக அரசு கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் அல்லாமல், காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு விதிக்கப்படும் தணிக்கைத் தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைளை வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் உட்பட 224 ஆசிரியர்களை நகர காவல் நிலையத்தினர் கைது செய்தனர்.

The post புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட 224 ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,government ,
× RELATED ஓய்வூதியர் தின விழா