கேடிசி நகர், ஜூலை 18: வள்ளியூர் பூங்கா நகர் பகுதியில் அதிக அளவில் மாத்திரைகளை தின்றதால் மயங்கி விழுந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கட்டிடத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
வி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த அக்பர் பாதுஷாவின் மகன் சேக் முகமது (35). கட்டிடத் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வள்ளியூர் பூங்காநகர் பகுதியில் வேலை பார்த்தபோது திடீரென அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்றாராம். இதனால் சிறிதுநேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து பதறிய அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளிகள் ஷேக் முகமதுவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ேநற்று காலை இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அதிக மாத்திரைகள் தின்ற கட்டிட தொழிலாளி சாவு appeared first on Dinakaran.
