×

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஜூலை 19: விருதுநகரில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர்கள், அலுவலர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் துணை பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ் மாநில சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து சங்கங்களும் இணைந்து தமிழ் மாநில பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் சட்ட விரோத அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர்.

என்எப்சி மாவட்ட செயலர் சம்பத்குமார் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஜெயக்குமார் கோரிக்கையை விளக்கி பேசினார். எஸ்என்இஏ(அதிகாரிகள் சங்கம்) மாவட்டச் செயலர் சண்முகராம் ராஜசேகரன், எஐஇடிஓஏ மாவட்ட உதவிச்செயலர் வாழ்த்தி பேசினர். இதில், அனைத்து சங்க தலைவர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.

The post பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Employees' Union Protest ,Virudhunagar ,BSNL Employees' Union ,BSNL Employees' Union and Officers' Union ,Virudhunagar Deputy General Manager's Office ,Tamil Nadu ,Virudhunagar… ,Employees' Union ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா