×

வாலிபர் கொலையில் ஒருவர் கைது

 

ராமநாதபுரம், ஜூலை 18: கமுதி அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், அம்மன்பட்டியை சேர்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமார்(23). கமுதி கோட்டைமேட்டில் வசித்து வந்த இவரை காணவில்லை என கடந்த 14ம் தேதி கமுதி போலீஸ் நிலையத்தில் அவரது தாயார் காளீஸ்வரி புகார் அளித்தார். இந்நிலையில் மண்டலமாணிக்கம் காவல் எல்லையான கமுதி-திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் நல்லுக்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து மண்டலமாணிக்கம் போலீசார் வழக்குப்பதிந்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இதில் மரக்குளத்தை சேர்ந்த குருவி ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறும்போது, நல்லுக்குமாரும், இவரது நண்பரான சபரிராஜனும்(25) கமுதி யூனியன் அலுவலகம் அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த மரக்குளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மணிவண்ணன்(30) மற்றும் பிரித்விராஜ், குருவி ரமேஷ் ஆகியோர் நல்லுக்குமாரிடம் ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தன்னை மட்டும் பாதி வழியில் இறக்கி விட்டு சென்றதாகவும், குருவி ரமேஷ் வாக்கு மூலம் அளித்துள்ளதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து குருவி ரமேஷை போலீசார் கைது செய்தனர்.

The post வாலிபர் கொலையில் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kamudi ,Nallakumar ,Nallamarudhu ,Ammanpatti, Virudhunagar district ,Kottayamette ,
× RELATED ஓய்வூதியர் தின விழா