- Gundas
- ராமநாதபுரம்
- கலெக்டர்
- சிம்ரன்ஜீத் சிங் காலன்
- கமல் முஸ்தபா
- ராமநாதபுரம் சின்னக்கடை தெரு...
- தின மலர்
ராமநாதபுரம், ஜூலை 18: ராமநாதபுரம் இளைஞர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்ட வழக்கில், கைதான நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் சின்னக்கடை தெருவை சேர்ந்த கமால் முஸ்தபா மகன் செய்யது அப்துல்லா(21). இவரது உடல் காயங்களுடன் கடந்த மே 17ம் தேதி திருப்புல்லாணி அருகே தினைக்குளம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. திருப்புல்லாணி போலீசார் உடலை கைப்பற்றி சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் இவரை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து, கடலில் வீசியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் ராமநாதபுரம் சின்னக்கடை தெருவைச் சேர்ந்த முகமது அனஸ்(32) உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முகம்மது அனஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு எஸ்.பி சந்தீஷ் பரிந்துரை அளித்ததன் அடிப்படையில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று, முகம்மது அனஸ் மீது குண்டர் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
The post குண்டாஸில் வாலிபர் கைது appeared first on Dinakaran.
