மதுரை ஜூலை 18: பிஎஸ்என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து, பிஎஸ்என்எல் தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று மதுரையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, தல்லாகுளம் பிஎஸ்என்எல் வளாகத்தின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் தொலைத்தொடர்பு அலைவரிசை சார்ந்த வாடிக்கையாளர்களின் குறைகள், பிஎஸ்என்எல் ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளை சந்திக்க தொடர்ந்து மறுத்துவருவதாகக்கூறியும், மாநில பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
The post பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
