×

திருமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி தலைவர் துவக்கினார்

 

திருமங்கலம், ஜூலை 18: உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமை, திருமங்கலம் நகராட்சியில் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துகுமார் நேற்று துவக்கி வைத்தார். திருமங்கலம் சோழவந்தான் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை, நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் துவக்கி வைத்தார். நகராட்சியில் முதல், இரண்டாம் மற்றும் எட்டாம் வார்டுகளில் வசிக்கும் ெபாதுமக்களுக்காக இந்த முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருமங்கலம் ஆர்டிஓ சிவஜோதி, தாசில்தார் சுரேஷ் கிளமெண்ட், நகராட்சி துணைத் தலைவர் ஆதவன் அதியமான், கமிஷனர் அசோக்குமார், இன்ஜினியர் ரத்தனவேல், கவுன்சிலர் சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post திருமங்கலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகராட்சி தலைவர் துவக்கினார் appeared first on Dinakaran.

Tags : Municipal Chairman ,Stalin Project Camp ,Thirumangalam ,Stalin ,Project ,Special Camp ,Ramya Muthukumar ,Thirumangalam Municipality ,Cholavanthan Road, Thirumangalam ,Municipal Chairman… ,Project Camp with You ,
× RELATED ஓய்வூதியர் தின விழா