×

திண்டுக்கல்லில் கூட்டுறவு மேலாண்மை தேர்வு

திண்டுக்கல், ஜூலை 18: திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பருவ தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான 2024-25ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை 191 மாணவ, மாணவிகள் எழுதினர். கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி தேர்வு கூடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தேர்வு எழுதும் மாணவர்களிடம் தேர்வு குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது பயிற்சி நிலைய முதல்வர் மகேஸ்வரி, கூட்டுறவு ஒன்றிப்பு செயலாட்சியர் ஐசக் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post திண்டுக்கல்லில் கூட்டுறவு மேலாண்மை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dindigul Cooperative Management Training Institute ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா