×

விசாரணைக்கு ஆஜராகாத எஸ்ஐக்கு பிடிவாரண்ட் நீதிபதி அதிரடி உத்தரவு

 

திட்டக்குடி, ஜூலை 18: சார்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு சாட்சி சொல்ல ஆஜராகாத எஸ்ஐக்கு நீதிபதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி காவல் நிலையத்தில் கடந்த 2023ம் ஆண்டு வாகன விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. பின்னர் இந்த வழக்கு விசாரணை திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், திட்டக்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டருக்கு சாட்சி சம்மன் அனுப்பப்பட்டது. அந்த சம்மனில் வரும் 17ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில், நீதிபதி விஸ்வநாத் முன்னிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சி குறித்து சப்-இன்ஸ்பெக்டரை ஆஜராக அழைத்த போது, சப்-இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை. இதையடுத்து சார்பு நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சாட்சி சம்மன் அனுப்பியும் ஆஜராகாத சப்-இன்ஸ்பெக்டர் மீது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post விசாரணைக்கு ஆஜராகாத எஸ்ஐக்கு பிடிவாரண்ட் நீதிபதி அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : SI ,Thittakudi ,station ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா