×

திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.3.2 லட்சம் நூதன மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

 

புதுச்சேரி, ஜூலை 18: புதுவை இளம்பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி ரூ.3.20 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த இளம்பெண், வரனுக்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அறிமுகம் இல்லாத நபர், செல்போனில் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அதில் பேசிய நபர், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாகவும், திருமணத்துக்கு பிறகு ஆஸ்திரேலியா செல்வோம் எனவும் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா செல்வதற்கு விமான டிக்கெட் எடுப்பதற்காக ரூ.3.2 லட்சம் அனுப்புமாறு கேட்டுள்ளார். இதனை நம்பிய இளம்பெண், ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்து 500ஐ அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே இளம்பெண்ணுக்கு, தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து இளம்பெண், புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆன்லைன் போர்ட்டல் மூலமாக நேற்று முன்தினம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணிடம் ரூ.3.2 லட்சம் நூதன மோசடி: சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Ariyanguppam ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா