புதுக்கோட்டை, ஜூலை 17: ஆலங்குடி அடுத்த மரமடை சாலையிலுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிரே வாலிபரை நான்குபேருக்கும் அதிகமான கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கல்லாலங்குடியை சேர்ந்தவர் தேவராஜன் மகன் ரஞ்சித்(24), டாடா ஏஸ் டிரைவர். இவர், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் ஆலங்குடியில் இருந்து மரமடைக்கு செல்லும் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். கடைக்கு முன் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது, அவரைப் பின்தொடர்ந்து வந்த நான்குக்கு மேற்பட்ட கொண்ட ஒரு கும்பல் ரஞ்சித்தை தலை, கழுத்து, தொடை பகுதியில் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில், வாலிபர் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். இதனால், அங்கு இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக டாஸ்மாக் கடையும் மூடப்பட்டது. இது குறித்து, அப்பகுதியினர் ஆலங்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லலூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், கொலை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த நான்குக்கு மேற்பட்டவர்களை ஆலங்குடி டிஎஸ்பி கலையரசன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
The post புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் வெட்டி கொலை appeared first on Dinakaran.
