- அரியலூர்
- அரியலூர் ஊராட்சி ஒன்றியம்
- குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
- தின மலர்
அரியலூர், ஜூலை 17: அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி நேற்று நடைபெற்றது.
இப்பயிற்சிக்கு, கோட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். அரசு மனநல திட்ட மருத்துவர் அஜித்தா உளவியல் ஆற்றுப்படுத்துநர் திவ்யா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் கோமதி, ஆகியோர் கலந்து கொண்டு, குழந்தை உளவியல், குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் முறை தடுத்தல் சட்டம், தத்தெடுத்தல், நிதி ஆதரவு திட்டம், வளர்ப்பு பராமரிப்பு திட்டம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் செயல்பாடுகள், சேவைகள், அரசு திட்டங்கள் குறித்து பேசி, பயிற்சி அளித்தனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக குழந்தைகள் அவசர உதவி மையம் 1098 என்ற எண்ணை அழைக்க அறிவுறுத்தினர். இப்பயிற்சியில், கிராம ஊராட்சி செயலர்கள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post குழந்தைகள் திறன் வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.
