×

தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, ஜூலை 17: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (18ம்தேதி) நடக்கிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் 3ம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூபர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, இப்பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், நாளை (18ம்தேதி) காலை 10 மணிக்கு, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District ,Employment and Career Guidance Center ,Collector ,Sathees ,Dharmapuri District Employment and Career Guidance Center… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா