×

சிவகங்கை சாலை விரிவாக்க திட்டம் விரைவில் கட்டிடங்கள் இடிப்பு

 

மதுரை, ஜூலை 17:மதுரை கலெக்டர் அலுவலக சந்திப்பு முதல் ஆவின் மற்றும் அப்பல்லோ சந்திப்பு வரை போக்குவரத்து சிக்னல்களை அகற்றி ரவுண்டானாவுடன், மேலமடை சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள், ரூ. 150.23 கோடியில் நடந்து வருகின்றன. தற்போது,, மேம்பால பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளன. அடுத்தகட்டமாக ரவுண்டானா அமைக்க நில ஆர்ஜித பணிகளுக்காக நோட்டீஸ் வழங்கும் பணிகள் சில மாதங்களாக நடந்து வந்தன.

இதற்காக ரூ.26 கோடி வரை இழப்பீடு வழங்க வேண்டிய நிலையில், அதற்கான அனுமதி பெற வருவாய் நிர்வாக ஆணையரிடம் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான அனுமதி ஓரிரு வாரங்களுக்குள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே அவற்றை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகளை துவக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post சிவகங்கை சாலை விரிவாக்க திட்டம் விரைவில் கட்டிடங்கள் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Collector's Office Junction ,Aavin ,Apollo Junction ,Melamadai Junction ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா