×

மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க கூட்டம்: கோ.தளபதி எம்எல்ஏ பங்கேற்பு

 

மதுரை, ஜூலை 17: மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், திமுக தலைவர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் மதுரை எல்லீஸ் நகர் பகுதிக்குட்பட்ட எஸ்.எஸ்.காலனியில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்எல்ஏ கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். எல்லீஸ் நகர் பகுதி செயலாளர் பி.கே.செந்தில் வரவேற்றார்.

இதற்கு மாவட்ட அவைத் தலைவர் மா.ஒச்சுபாலு, பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.ஆறுமுகம், பகுதி செயலாளர் சு.பா.கண்ணன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக இளம் பேச்சாளர் கதிரவன், தலைமைக்கழக பேச்சாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

வட்டச் செயலாளர்கள் பி.கே.சுரேஷ், பூங்கா மணிகண்டன், மாணிக்கம், அழகு சுந்தரம், மாமன்ற உறுப்பினர் செல்வி செந்தில், இளைஞரணி நிர்வாகிகள் ராஜபாண்டி, சுந்தரேஸ்வரன், பாலாஜி, சக்தி, வினோத் உள்ளிட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள், திமுகவினர் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

The post மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சாதனை விளக்க கூட்டம்: கோ.தளபதி எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka Youth ,Madurai Managar District ,MLA ,Madurai ,Madurai Municipal District ,Dimuka ,Dimuka Government ,Madurai Ellis Nagar Area ,Managar District ,Co. ,Commander ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா