×

திண்டுக்கல்லில் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை

திண்டுக்கல், ஜூலை 17: திண்டுக்கல் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தலைமையில் கட்சியினர் ஏஎம்சி ரோட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் திருசித்தன், தொகுதி துணை செயலாளர் ஆற்றலரசு, சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் பாபு, நகர செயலாளர் ஆனந்தராஜ், இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் இருதயராஜ், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சவரியம்மாள், மாவட்ட துணை அமைப்பாளர் நிர்மலா தேவி, நகர பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Dindigul ,Dindigul Metropolitan District Liberation Tigers Party ,Perunthalaivar ,Metropolitan District Secretary ,Maideen Bava ,AMC Road ,
× RELATED ஓய்வூதியர் தின விழா