×

கவின்கேர் நிறுவனத்தின் மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ அறிமுகம்

சென்னை: கவின்கேர் நிறுவனம் சார்பில், மீரா அரிசிக் கஞ்சி ஷாம்பூ சென்னையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. கவின்கேர் நிறுவனம் மீரா பிராண்டின் கீழ் அரிசிக் கஞ்சி ஷாம்பூவை சென்னையில் நடந்த நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாட்டில் அறிமுகமாகியுள்ளதாகவும், விரைவில் தென்னிந்தியா முழுவதும் சந்தைப்படுத்தப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரிசிக் கஞ்சி மற்றும் கற்றாழை ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஷாம்பூ முடியை மென்மையாக்கும், பொலிவு படுத்தும். உலர் முடிகளுக்கான பராமரிப்பாக அமையும்.

3 நாட்களுக்கு முடியை சீராக வைத்திருக்கும். இந்நிகழ்ச்சியில், கவின்கேர் தனிநபர் பராமரிப்பு வணிகப்பிரிவு தலைவர் ரஜத் நந்தா கூறுகையில், ‘‘அரிசிக் கஞ்சி பல தலைமுறைகளாக இயற்கை முடி பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மீரா அரி கஞ்சி ஷாம்பூ மூலம் பாரம்பரித்தை நவீன வடிவில் கொண்டு வருவதில் பெருமை கொள்கிறோம். ரூ.2க்கு சாசே, ரூ.85க்கு 80 மில்லி, ரூ.224க்கு 180 மில்லி, ரூ.447க்கு 340 மில்லி, ரூ.1,014க்கு 650 மில்லி மற்றும் ரூ.1,312க்கு 1 லிட்டர் என பல அளவுகளில் விற்பனைக்கு கிடைக்கும்’’, என்றார்.

The post கவின்கேர் நிறுவனத்தின் மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Kavincare Company ,Chennai ,Meera ,Tamil Nadu ,South India… ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...