×

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்

 

விருதுநகர், ஜூலை 16: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆனந்த் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், களப்பணியாளர்கள் பணிச் சுமையை குறைக்க வேண்டும். தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆய்வாளர், ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும். உயர் அலுவலர்கள் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். காலமுறை ஊதியத்தில் புல உதவியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

The post 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Surveyors Union District ,President ,Marimuthu ,District Vice President ,Vijay Anand ,Virudhunagar Collectorate… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா