×

திண்டுக்கல் 22வது வார்டில் பேவர் பிளாக் அமைக்க பூமி பூஜை

திண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு பள்ளிவாசல் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடைபெற்றது. மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

திமுக மாநகர செயலாளரும் துணை மேயருமான ராஜப்பா தலைமை வகித்து பூமி பூஜை செய்து சாலை பணியை துவக்கி வைத்தார். இதில் மாநகர பொருளாளர் மீடியா சரவணன், மண்டல தலைவர் ஜான் பீட்டர், பகுதி கழக பொறுப்பாளர் பஜ்லுல் ஹக், மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார், 22வது வார்டு செயலாளர் தன்ராஜ், நிர்வாகி ராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் 22வது வார்டில் பேவர் பிளாக் அமைக்க பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi Puja ,Dindigul 22nd ,Dindigul ,Pallivasal Street, Ward 22 ,Dindigul Corporation ,Mayor ,Ilamathi Jyothi Prakash ,DMK ,Municipal Secretary… ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா