- வளர்ச்சி தினம்
- திண்டுக்கல் நூலகம்
- திண்டுக்கல்
- தினம்
- திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம்
- காமராஜ்
- வாசகர் வட்டம்
- ஜனாதிபதி
- லாசர் வேளாங்கண்ணி
- தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் சங்கங்கள்
- நூலகம்
- தின மலர்
திண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் லாசர் வேளாங்கண்ணி தலைமை வகித்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணை தலைவர் சவுந்தரராஜன், இரண்டாம் நிலை நூலகர் சுகுமார் முன்னிலை வகித்தனர். முதல் நிலை நூலகர் சக்திவேல் வரவேற்றார்.
வாசகர் வட்ட பொருளாளர் அனந்தராமன், பட்டிமன்ற நடுவர்கள் சுரதா, கோவிந்தராசு, ஆசிரியர் ஜெயராமன், காந்தி மக்கள் இயக்க மாநில தலைவர் ஜெயசீலன், இலக்கிய கள பொறுப்பாளர் மீரா பாய், காந்தி கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் பிரபாவதி, சிறார் எழுத்தாளர் முருகேசன் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
The post திண்டுக்கல் நூலகத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா appeared first on Dinakaran.
