×

எங்கே யார் தவறு செய்தாலும் தண்டனை தரக்கூடிய தலைவர் தான் எங்கள் முதலமைச்சர் : அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை : அதிமுக – பாஜக கூட்டணியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி, ” ஒரு குடும்பத்தில் துக்கம் நிகழ்ந்தால் வருத்தம் தெரிவிப்பது மனிதாபிமானம். அந்த மனிதாபிமானம் மிக்க முதலமைச்சர் தான் எங்கள் முதலமைச்சர். குருவிகளை போல் சுட்டி தள்ளிவிட்டு எங்களுக்கு தெரியாது என்று கூறும் எடப்பாடி பழனிசாமியை போல் எங்கள் முதலமைச்சர் கிடையாது. எங்கே யார் தவறு செய்தாலும் தன்னுடைய கட்சிகாரர்களே தவறு செய்தாலும் தண்டனை தரக்கூடிய தலைவர் தான் எங்கள் முதலமைச்சர்.

குற்றவாளிகள் இந்த ஆட்சியில் தப்பிக்க கூடாது. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்பது தான் இந்த ஆட்சியின் நோக்கம். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் 5 மாதங்களிலேயே தீர்ப்பை பெற்றது தான் அதற்கு உதாரணம். அதிமுக – பாஜக கூட்டணியில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இபிஎஸ் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்கிறார்; தலைமை பேசி முடிவு செய்யும் என பாஜக கூறுகிறது. அதிமுக உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இபிஎஸ் திமுகவின் திட்டத்தை விமர்சிக்கிறார். மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இபிஎஸ் நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்திருக்கலாம். தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இபிஎஸ், ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம். பாஜகவின் சி டீமான விஜயின் தவெக கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

The post எங்கே யார் தவறு செய்தாலும் தண்டனை தரக்கூடிய தலைவர் தான் எங்கள் முதலமைச்சர் : அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Minister ,Ragupati ,Pudukkottai ,Adimuka-BJP ,Pudukkota ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...