×

காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயிலில் 2,660 டன் யூரியா வருகை

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 2,660 டன் யூரியா சரக்கு ரயில் மூலம் வந்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான வேளாண் இடுபொருட்களான விதைகள் மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்திட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.யூரியா மற்றும் உரம் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட தனியார் மற்றும் மொத்த விற்பனை, சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு போதிய அளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 2,660 டன் யூரியா கொண்டுவரப்பட்டது. பின்னர், அந்த உரமூட்டைகள் சரக்கு லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு வேளாண் உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டது.மேலும், மாவட்டத்தில் உள்ள தனியார் விற்பனை மையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் 3,037 டன் யூரியா, 880 டன் டிஏபி, 802 டன் பொட்டாஷ், 4,470 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் இருப்பில் உள்ளது6. விவசாயிகள் விற்பனை மையங்களுக்கு சென்று தேவையான உரங்களை பெற்றுக்கொள்ளலாம். விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தாலோ, கூடுதல் பொருட்களை வழங்கினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் இணை இயக்குநர் முருகன் தெரிவித்துள்ளார்….

The post காரைக்காலில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரயிலில் 2,660 டன் யூரியா வருகை appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Thiruvanna Namalai ,Tiruvannamalai ,Karaikal port ,Thiruvannamalai district ,Thiruvandamalai district ,Thiruvanna Malay ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...