×

அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் கீரனூர் பிரிவு சாலையில் சிசிடிவி கேமரா

இலுப்பூர், ஜுலை 15: அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் கீரனூர் பிரிவு சாலையில் புதிய கண்காணிப்ப கேமரா பயன்பாட்டிற்கு வந்தது. அன்னவாசல் பகுதியில் பல்வேறு பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அன்னவாசல் காவல் நிலைய சரகப்பகுதி அதிக கிராமங்களை கொண்ட பகுதியாகும். ஆதிகமான போக்குவரத்து உள்ள பகுதியிலும் மக்கள் நடமாடும் பகுதியிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என பொதுமக்கள் வழியுறுத்தி வந்தனர்.

முன்பு அமைக்கப்பட்டிருந்த கேமரா பழுதடைந்த நிலையில் புதிய கேமரா அன்னவாசல் பேருந்து நிலையம் கீரனூர் பிரிவு சாலையில் நன்கொடையாளர்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்டது. இதை அன்னவாசல் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன், அன்னவாசல் திமுக நகர பொருப்பாளர் முகமது ரிஷா ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளர் துரைராஜ், அன்னவாசல் பகுதியை சேர்ந்த வணிகர்கள் மணி, சரவணன், செல்லமணி, கிட்டு, கருப்பையா. சிதம்பரம் உள்ளிடோர் கலந்து கொண்டனர். இதேபோல், அன்னவாசல் காவல்நிலைய பகுதிகளாக பெருமநாடு, குடுமியாண்மலை, வயலோகம், பரம்பூர். மண்ணவேளாம்பட்டி பிரிவு சாலை பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்ட உள்ளது.

The post அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் கீரனூர் பிரிவு சாலையில் சிசிடிவி கேமரா appeared first on Dinakaran.

Tags : Keeranur Division Road ,Annavasal Bus Stand ,Ilupur ,Annavasal ,Annavasal Police Station ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா