×

சின்னமனூர் புறவழிச்சாலையில் உயரமான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி

சின்னமனூர் : சின்னமனூரில் உயரமான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் நகராட்சி அமைந்துள்ளது. வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இந்த நகராட்சியில், தேசிய நெடுஞ்சாலை தவிர, புறவழிச்சாலையும் உள்ளது. நகரில் உள்ள கண்ணாள் கோயில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே தொடங்கும் புறவழிச்சாலை, மார்க்கையன்கோட்டை சாலை மாணிக்கவாசகர் கோயில் அருகே, மாநில நெடுஞ்சாலை நான்கு சந்திப்பை கடந்து, முத்துலாபுரம் விலக்கு வேம்படிக்களம் இடையே மெயின்ரோட்டில் சந்தித்து உத்தமபாளையம் செல்கிறது. இந்நிலையில், மார்க்கையன்கோட்டை மாணிக்கவாசகர் கோயில் அருகே புறவழிச்சாலையில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, மாநில நெடுஞ்சாலை இருபுறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை ‘வி சேப்பில்’ மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. வேகத்தடையில் வாகனங்கள் ஏறி, இறங்கும்போது, வாகனங்களின் ஆக்ஸி வீல் உடையும் அபாயம் உள்ளது. மேலும், வாகனங்கள் கவிழும் சூழலும் ஏற்படும். எனவே, மாநில நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வேகத்தை அமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சின்னமனூர் புறவழிச்சாலையில் உயரமான வேகத்தடையால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Chinnamanur Municipality ,Dindukul-Kumuli National Highway ,Avadi ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்