×

முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்-பழநியில் ஆடல், பாடலுடன் கொண்டு வந்தனர்

பழநி : பழநியில் முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு, தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாத இறுதியில் நடந்தது. இவ்விழாவில் வள்ளி – தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இதையடுத்து வள்ளியின் பிறந்த வீடான குறவர் இன மக்கள் சார்பில் தாய் வீட்டு சீதனம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த குறவர் இன மக்களில் ஒரு குழுவினர் பழநி முருகனுக்கு நேற்று தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்தனர்.இதில் தேன், திணைமாவு, மா, பலா, வாழை, மக்காச்சோளம், பல்வேறு வகையான பழங்கள், கிழங்கு வகைகள், வில்-அம்பு போன்றவை சீதனமாக வைத்து பழநி நகரின் வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். சிறுவர்-சிறுமியர் மலைவாழ் மக்களின் பாரம்பரிய உடையணிந்து ஆடிப்பாடியபடி வந்தனர். அதில் பலர் முருகன் – வள்ளி வேடமிட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்….

The post முருகனை திருமணம் செய்த வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம்-பழநியில் ஆடல், பாடலுடன் கொண்டு வந்தனர் appeared first on Dinakaran.

Tags : Valli ,Murugana ,Sitam-Palani ,PALANI ,Padani ,Dindukal District ,Sitam ,Vadanili Adal ,
× RELATED குன்னத்தில் வாய்த்தகராறில் தந்தையை கீழே தள்ளி கொலை செய்த மகன் கைது