×

துபாய் விமானம் 10 மணி நேரம் தாமதம்

 

அவனியாபுரம், ஜூலை 14: துபாய் – மதுரை – துபாய் இடையே தினசரி பயணியர் விமான சேவை இயக்கப்படுகிறது. இதன்படி தினந்தோறும் காலை 11.10 மணிக்கு வந்து சேரும் விமானம், மறுமார்க்கமாக பகல் 12 மணிக்கு புறப்படும். இந்நிலையில் நேற்று காலை 11.10 மணிக்கு வந்து சேர வேண்டிய விமானம், பத்தரை மணி நேரம் தாமதமாக இரவு 9.50 மணிக்கு மதுரை வந்தது.
இதனால் மதுரையிலிருந்து துபாய் செல்ல காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இதுபோன்ற தாமதத்தால் தங்களது பணிகள் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

The post துபாய் விமானம் 10 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Tags : Dubai ,Avaniyapuram ,Madurai ,
× RELATED ஓய்வூதியர் தின விழா