திருப்பரங்குன்றம், ஜூலை 14: திருப்பரங்குன்றம் கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 14) நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இரவு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் தயாராகும் உணவு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் தீர்த்தம் தெளிக்க பயன்படுத்தப்படும் ட்ரோன்களை இயக்கி பரிசோதனை செய்ததைதையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். உடன் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.
The post திருப்பரங்குன்றத்தில் அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.
