×

முகை

லைட் ஹவுஸ் மீடியா, ஸ்ரீதர்மா புரொடக்‌ஷன்ஸ், ஜாஸ்பர் ஸ்டுடியோஸ், விஸ்தாரா ஆகிய நிறுவனங்களின் சார்பில் கே.சந்தோஷ், பி.தர்மராஜூலு, ஜே.அஜித் குமார் இணைந்து தயாரித்துள்ள படம், ‘முகை’. ஜே.அஜித் குமார் இயக்கியுள்ளார். கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடித்துள்ளனர். அர்ஜூன் அக்காட் ஒளிப்பதிவு செய்ய, சக்தி இசை அமைத்துள்ளார். சோமு வஜவர் பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஜே.அஜித் குமார் கூறுகையில், ‘முகை என்றால், மலர்வதற்காக காத்திருக்கும் மொட்டு என்று பொருள்.

ஒரே இடத்தில் நடக்கும் திரில்லர் கதை கொண்ட இதே பாணியில் சில படங்கள் ரிலீசாகி இருந்தாலும், அவற்றில் இருந்து இப்படம் மிகவும் மாறுபட்டிருக்கும். ஆரம்பம் முதல் இறுதிவரை, அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வியுடனேயே ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. யூடியூப் மூலம் பிரபலமாக இருக்கும் ஆர்ஷா சாந்தினி பைஜூவின் வீடியோவைப் பார்த்துவிட்டு ஹீரோயினாக தேர்வு செய்தோம். அவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்துக்குப் பிறகு அவர் முன்னணி நடிகையாக மாறுவார்’ என்றார்.

The post முகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : K. Santhosh ,P. Dharmarajulu ,J. Ajith Kumar ,Light House Media ,Sridharma Productions ,Jasper Studios ,Vistara ,Kishore Kumar ,Arsha Chandni Baiju ,Arjun Akkad… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தெளிவு பெறுஓம்: மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா?