×

‘நகை கடன் தள்ளுபடி – தகுதி உள்ள மற்றும் தகுதியற்ற நபர்களின் பட்டியலை தயார் செய்ய குழு’ – துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை: நகை கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதி உள்ள மற்றும் தகுதி அற்ற நபர்களை அடையாளம் கண்டு, பட்டியலை தயார் செய்ய ஒரு துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளாது. 5 சவரனுக்கு கீழ் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வைத்துள்ளவர்களில் தகுதியுடையவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து, போலி நகைகளை வைத்து நகைக்கடன் பெற்றவர்கள், பல சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்கள் என தகுதியற்றவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக தகுதி உள்ள மற்றும் தகுதி அற்ற நபர்களை அடையாளம் கண்டு, பட்டியலை தயார் செய்ய ஒரு துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு தயாரித்த பட்டியலை அந்த அந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும், அதன் பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ‘நகை கடன் தள்ளுபடி – தகுதி உள்ள மற்றும் தகுதியற்ற நபர்களின் பட்டியலை தயார் செய்ய குழு’ – துணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jewellery Loan Waiver ,Committee to Prepare List of Eligible and Ineligible Persons' ,Tamil Nadu Government ,Chennai ,Loan Waiver ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...