×

அன்னாசி பழங்கள் விற்பனை அமோகம்

அரூர், ஜூலை 11: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் அன்னாசி பழம் அறுவடை துவங்கியுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வாங்கி வந்து, அரூரில் சாலையோரங்களில், மினிடோர் வாகனங்களில் வைத்து அன்னாசி பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அளவை பொறுத்து ஒரு பழம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர் மேற்பட்ட இடங்களில் வாகனத்தில் வைத்து கூவி, கூவி விற்பனை செய்து வருகின்றனர். விலை குறைவாக உள்ளதாலும், கொல்லிமலை அன்னாசி சுவையாக இருக்கும் என்பதாலும், பொதுமக்கள் ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

The post அன்னாசி பழங்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Kollimalai ,Namakkal district ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா