×

பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது

சென்னை: திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகள் அடிக்கடி திருடுபோனது. புகாரின்படி முத்தாபுதுப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். அதன்படி நேற்று தனிப்படை போலீசார் வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி சாலை பாலவேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை மடக்கினர். அப்போது, போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். போலீசார் பைக்கை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் திருநின்றவூர் பெரியார் நகர் திருவள்ளுவர் 3வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(29), பெயின்டர் என்பது தெரியவந்தது.இவர் திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, திருவள்ளூர், வெங்கல், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் ரயில்வே ஸ்டேஷன், வீடு, கடைகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. இவர் திருடிய வாகனங்களை திருநின்றவூர் அடுத்த பாக்கம் வ.உ.சி.  தெருவை சேர்ந்த மெக்கானிக் மணிகண்டன் (29) என்பவர் மூலம் பைக்குகளை விற்பனை செய்ததும்  தெரியவந்தது. அவரை கைது செய்து 11 பைக்குகளை பறிமுதல் செய்தனர்….

The post பைக்குகள் திருட்டு 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruninnavoor ,Muthabuduppet ,Muthaputuppet ,
× RELATED சென்னை திருநின்றவூரில் வெயிலின்...