×

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்பு மனு

 

சீர்காழி, ஜூலை 10: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளிகள் முன்னிலையில் சங்கத்தின் நகர செயலாளர் .

முருகன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று வேட்புமனுவை பேரூராட்சி செயல் அலுவலர் அருள்மொழியிடம் வழங்கினார். இதில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

The post வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி வேட்பு மனு appeared first on Dinakaran.

Tags : Vaitheeswaran Temple Panchayat ,Sirkazhi ,Tamil Nadu Association ,of ,Types ,Differently ,Persons ,Murugan ,
× RELATED ஓய்வூதியர் தின விழா