×

போலீஸ் பயிற்சி பள்ளியில் பயின்று 25 ஆண்டுகளுக்கு பின் பெண் காவலர்கள் சந்திப்பு

மாமல்லபுரம்: கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் 1997ம் ஆண்டில் பயின்ற பெண் காவலர்கள் 420 பேர், தற்போது தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இதில், 30 இன்ஸ்பெக்டர், 25 எஸ்ஐக்களாக உள்ளனர். பலர்  சிறப்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற உள்ளனர். இந்நிலையில், மாமல்லபுரத்தில், பழைய பெண் காவலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் டிஜிபி திலகவதி, முன்னாள் ஐஜி மாசானமுத்து ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, பெண் காவலர்களின் பணி குறித்து பேசினர். இதில், 125 பெண் காவலர்கள் கலந்து கொண்டு, தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து முன்னாள் டிஜிபி திலகவதி, செய்தியாளர்களிடம் கூறுகையில், 1997ம் ஆண்டு கோயம்புத்தூர் பயிற்சி பள்ளியில் பயின்ற 420 பெண் காவலர்கள், தமிழக காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் ஐஜி மாசானமுத்து, ஆண்களுக்கு நிகராக, இந்த பெண் காவலர்களுக்கும் கடுமையான பயிற்சி அளித்தார். இதனால் அவர்கள், தற்போது பல்வேறு காவல்நிலையங்களில் சிறப்பாக பணியாற்றி, ஆண்களுக்கு நிகராக நாங்களும் பணி செய்வோம் என நிரூபிக்கின்றனர் என்றார். தொடர்ந்து, 125 பெண் காவலர்களுகு கேடயம் வழங்கி கௌரவித்தார்….

The post போலீஸ் பயிற்சி பள்ளியில் பயின்று 25 ஆண்டுகளுக்கு பின் பெண் காவலர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Goa Police Training School ,Tamil Nadu ,Police Training School ,Dinakaran ,
× RELATED மீன் வளத்துறை சார்பில் படகுகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்