×

சிறைபிடிக்கப்பட்ட 21 பேர் விடுதலை கோரி 50 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

நாகை: நாகை அக்கரைபேட்டை துறைமுகம் மற்றும் காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியில் இருந்து சென்ற 21 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் நேற்றுமுன்தினம்  சிறைப்பிடிக்கப்பட்டனர்.  இந்நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 மீனவர்களையும் விடுதலை செய்யவும், இந்தியா- இலங்கை எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், தமிழக மீனவர்கள் போதிய பாதுகாப்போடு மீன்பிடி தொழிலை செய்யவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லாறு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நேற்று முதல் துவக்கியுள்ளனர். இதனால் கடுவையாறு மற்றும் அந்தந்த கரைகளில் 2,000 விசைப்படகு, 5,000 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகை மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டை கூறி இலங்கை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களது காலவரையற்ற போராட்டம் தொடரும் என்றனர்….

The post சிறைபிடிக்கப்பட்ட 21 பேர் விடுதலை கோரி 50 ஆயிரம் மீனவர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் appeared first on Dinakaran.

Tags : Indefinite Strike ,Nagai ,Nagai Akkaraipet Port ,Karaikal Kottucherry ,Dinakaran ,
× RELATED நாகை மாவட்டத்தில் கள்ளச்சந்தையில்...