×

ஏரியிலிருந்து கல் வெட்டி கடத்தியவர் தப்பியோட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அரசு அனுமதியின்றி, அங்குள்ள ஏரியில் சக்கை கல், வெட்டி எடுப்பதாக, வந்த புகாரின்பேரில் விஏஓ தீபா சம்பவ இடத்துக்கு சென்றார். அவரை பார்த்ததும் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு சுரேஷ் தப்பியோடினார். இதையடுத்து, ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் டிராக்டரை ஒப்படைத்து விஏஓ தீபா புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

The post ஏரியிலிருந்து கல் வெட்டி கடத்தியவர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : PAPRETIPATTI ,SURESH ,BHATWARTI VILLAGE ,CHAKAI STONE ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...