×
Saravana Stores

பொன்னமராவதி அருகே அரசமலையில் பனை விதை மேம்பாட்டு இயக்கம்: வேளாண் அதிகாரி துவக்கி வைத்தார்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே அரசமலையில் பனை விதை மேம்பாட்டு இயக்கம் வேளாண் இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.பொன்னமராவதி வட்டாரத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமலை ஊராட்சியில் பனை விதை மேம்பாட்டு திட்டத்தினை புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் தொடங்கி வைத்தார்.சாத்தனூர் கண்மாயில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. ஊராட்சித்தலைவர் பழனிவேல் முன்னின்று நடத்திக் கொடுத்தார். வேளாண் இணை இயக்குனர் விவசாயிகளிடம் பேசுகையில், பனை மரம் நமது நாட்டின் சின்னமாகும் பனை மரங்களை அழிவிலிருந்து காப்பதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை பனை மேம்பாட்டு இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. வரப்பு ஓரங்களிலும், நீர்நிலைகளிலும், தரிசு நிலங்களிலும் விதைப்பதால் பனைமரத்தின் வேர்கள் பரவிச் சென்று நீரை ஈர்ப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். வேர்கள் மண்ணை பிடித்திருப்பதால் மண் அரிப்பை தடுக்கலாம். 15 வருடங்கள் கழித்து விவசாயிகள் நொங்கு மற்றும் பதநீர் மூலம் கூடுதல் லாபம் பெறலாம். மேலும் நெல் தரிசில் பயறு விதைகளை விதைப்பதால் பயறுகளின் வேர் முடிச்சிலுள்ள ரைசோபியம் எனும் பாக்டீரியா காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்திக் கொடுக்கும். இதனால் உரத்தை சிக்கனப்படுத்தி பயன்பெறலாம். அதனால் விவசாயிகள் விதைகளை விதைக்கும் முன்பு நுண்ணுயிர் உரம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். பயிர்கள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளரும். கூடுதல் மகசூல் பெறலாம் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி, ஊராட்சித்தலைவர் பழனிவேல், உதவி வேளாண் அலுவலர் முருகேசன் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்….

The post பொன்னமராவதி அருகே அரசமலையில் பனை விதை மேம்பாட்டு இயக்கம்: வேளாண் அதிகாரி துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Palm Seed Development Movement ,Arasamalai ,Bonnamarawati ,Bonnamarawathi ,Rajasamalam ,Ponnamarawathi ,Rajasalam ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே கணவருடன் தகராறில் 2...