×

வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் 6ம் தேதி 16.8 அடி உயர கல் கருடன் பிரதிஷ்டை

வாலாஜா: வாலாஜாவில் உலகின் மருத்துவ கடவுளான தன்வந்திரிக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது. மேலும் 468 சித்தர்கள் லிங்கவடிவில் இங்கு பிரதிஷ்டை ெசய்யப்பட்டுள்ளது. இதனை தரிசிக்க தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து 16.8அடி உயரத்தில் கல் கருடன் சிலை மாமல்லபுரத்தில் செய்யப்பட்டது.தொடர்ந்து கரிக்கோல யாத்திரையாக தமிழகம் முழுவதும் பவனிவந்தது. இந்நிலையில் வரும் 6ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 9மணி முதல் 10 மணிக்குள் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. நிகழ்ச்சிக்கு முரளிதர சுவாமிகள் தலைமை தாங்குகிறார். திருமலைக்கோடி சக்தி அம்மா முன்னிலையில் 16.8அடி உயரமுள்ள கல் கருட பிரதிஷ்டா மஹோச்சவம் நடைபெறுகிறது. இதில் மகாதேவமலை மகானந்த சித்தர், ரத்தினகிரி பாலமுருகனடிமை, காமாட்சி சுவாமிகள் மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக முரளிதர சுவாமிகள் முன்னிலையில் பல்வேறு யாகங்கள் நடைபெறுகிறது….

The post வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வரும் 6ம் தேதி 16.8 அடி உயர கல் கருடன் பிரதிஷ்டை appeared first on Dinakaran.

Tags : Vallaja Dhanwantri Health Faculty ,Valaja ,Wallaja ,Tanvandiri ,Linkavadi ,Vallaja Dhanwandi Health Faculty ,
× RELATED சென்னைக்கு கார்களில் கடத்திய 3 டன் குட்கா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது