×

2 ஆண்டுகளுக்கு பின் சுருளி அருவி திறப்பு: நீர்வரத்து குறைவால் சுற்றுலாப்பயணிகள் ‘அப்செட்’

கம்பம்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சுருளி அருவி நேற்று திறக்கப்பட்டது. ஆனால், நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில், கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் அடைக்கப்பட்டன. இதில், சுருளி அருவிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு சுருளி அருவி நேற்று திறக்கப்பட்டது. இந்த அருவி, திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதால், கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தும், சானிடைசர் தெளித்தும் சுருளி அருவி பகுதிக்கு அனுப்பி வைத்தனர். நுழைவு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்பட்டது,  5 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கட்டணம் இல்லை. வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் அருவிக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அருவிக்கு குளிக்க சென்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.இதுகுறித்து கிழக்கு வனச்சரக அலுவலர் கூறுகையில், ‘‘சுருளி அருவி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை. ஆனால், அதே நேரத்தில் சுருளி அருவி பகுதிகளுக்குள் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது’’, என்றார்….

The post 2 ஆண்டுகளுக்கு பின் சுருளி அருவி திறப்பு: நீர்வரத்து குறைவால் சுற்றுலாப்பயணிகள் ‘அப்செட்’ appeared first on Dinakaran.

Tags : Sroll Fallout ,Pole ,Scrolle Fall ,Sroll ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு சென்ற அமெரிக்காவின் லேண்டர் செயல்பாட்டை நிறுத்தியது