×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளின் சின்னம், கொடி, படங்கள் விற்பனை ஜோர்

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கூட்டணி பங்கீடு, வார்டு ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு, மனுதாக்கல் என தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. வேட்பு மனுதாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இறுதி பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு பெற்றவுடன் வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த பிரசாரத்தின் போது தொண்டர்கள் அரசியல் கட்சிகளின் கொடிகளுடன் மட்டுமின்றி சேலை, சட்டை, வேட்டி, தொப்பி, குடை போன்றவற்றை அணிந்து ஈடுபடுவர். இதற்காக, திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் சுயேட்சை சின்னங்களுடன் கொடிகள் தயாரிக்கப்பட்டு கோவை கடை வீதிகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுதவிர, புதிதாக மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பிரசாரத்துக்கு செல்லும் நபர்கள் பயன்படுத்தும்  வகையில் சிறிய அளவிலான துணி கொடிகள், வாகனங்களில் பொருத்தும் வகையிலான கொடிகள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சிகளின் கொடிகள், குடைகள், சேலைகள் போன்றவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. இதுகுறித்து கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், ‘‘அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிப்பு பணி முடிந்து தற்போது விற்பனை நடந்து வருகிறது. முக்கிய கட்சிகளின் கொடிகள், சின்னத்துடன் கூடிய துணிகள், காகித கொடிகள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கட்சி கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகிறது. இன்னும் சில தினங்களில் கட்சிகள் பிரசாரம் தீவிரம் அடையும் நிலையில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றனர்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளின் சின்னம், கொடி, படங்கள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Urban Local Government Elections ,Coimbatore ,Urban ,government ,Jor ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்